இணையத்தில் டிரெண்ட் ஆகும் 'கோபேக் மோடி', 'வெல்கம் அபிநந்தன்'
- IndiaGlitz, [Friday,March 01 2019]
பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் கருப்புக்கொடி காட்டுவதை வழக்கமாக கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்றும் பிரதமர் மோடி கன்னீயாகுமரிக்கு வந்ததற்கு கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தனது எதிர்ப்பை காட்டி கைதானார். அதேபோல் பிரதமரின் ஒவ்வொரு தமிழக விசிட்டின்போது 'கோபேக் மோடி' டுவிட்டரில் டிரெண்ட் ஆவது வழக்கம். அதுவும் இன்று நிகழ்ந்தது
இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய ராணுவ வீர்ர் அபிநந்தன் சற்றுமுன் இந்திய எல்லைக்குள் வந்ததை அடுத்து அதே டுவிட்டரில் 'வெல்கம் அபிந்தந்தன்' என்ற டிரெண்ட் உருவாகியுள்ளது.
ஒரு நாட்டின் பிரதமருக்கு 'கோபேக் டிரெண்டும் ஒரு ராணுவ வீரருக்கு 'வெல்கம் டிரெண்டும் சமூக வலைத்தள பயனாளிகள் கொடுத்து வருவதன் மூலம் பல எண்ணங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதுகுறித்து ஒரு பெரிய விவாதமே சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது. இதுகுறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்