டுவிட்டர் டிரெண்டில் இடம்பெற்ற 'கோபேக் ஸ்டாலின்': அதிர்ச்சியில் திமுக

  • IndiaGlitz, [Tuesday,July 17 2018]

பொதுவாக நெட்டிசன்களின் இணையவழி போர் பாஜக மீதுதான் பெரும்பாலும் இருக்கும். குறிப்பாக பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்த போது 'கோபேக் மோடி' என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரண்டாகியது. அதேபோல் சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வந்தபோது, 'கோபேகெ அமித்ஷா' ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆனது

இந்த நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்புகிறார். இதனையடுத்து 'கோபேக் ஸ்டாலின்' என்ற ஹேஷ்டேக் திடீரென தோன்றி டிரெண்ட் ஆகியுள்ளது. ஏற்கனவே பாஜகவுக்கு எதிராக திமுகவினர்கள் தான் ஹேஷ்டேக் உருவாக்கி அதனை டிரெண்ட் ஆக்கி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதே ஆயுதத்தை பாஜக ஆதரவு நெட்டிசன்கள் கையில் எடுத்துள்ளனர்.

ஆனால் 'கோபேக் ஸ்டாலின்' ஹேஷ்டேக்கிற்கு பதிலடியாக 'வெல்கம் ஸ்டாலின்' என்ற ஹேஷ்டேக்கை திமுகவினர் உருவாக்கி அதையும் டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளதால் இரு கட்சியினர்களிடையேயான இணையவழிப்ப்போர் தற்போது சூடுபிடித்துள்ளது.