எதிர்பார்ப்புகளைத் தாண்டி எகிற வைக்கும் GOAT...
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பளார் T. சிவா. அம்மா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் பல வெற்றித் திரைப்படங்களை வெளியிட்டவர். நடிகராவும், விநியோகஸ்தராகவும் இருப்பவர்.
இளையதளபதி விஜய் நடித்த Goat படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, சமீபத்தில்தான் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். இதுவே அவருடைய திரைப் பயணத்தில் கடைசி படம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இந்தநிலையில், இந்த படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏந்தி விரைவில் வெளிவர இருக்கிறது.
தயாரிப்பாளரும், Goat படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்துள்ள T. சிவா Indiaglitz நேயர்களோடு Goat திரைப்படம் குறித்தும், இளையதளபதி விஜய் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் சொல்லியிருப்பதாவது......
இந்த படத்தின் மீது நடிகர் விஜய் மிகப்பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்.
பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் வச்சிக்கிட்டு தியேட்டர் வராதீங்க. அங்க வந்து பார்த்துட்டு ரசிகர்கள் முடிவு பண்ணுவாங்க.
இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு தெரியும் அவர் பொறுப்பு என்னவென்று. மூன்று மணி நேரம் நம்பி தியேட்டருக்கு வாங்க. ஒரு frame கூட வேஸ்ட் இருக்காது. அது வேஸ்ட்னா வெங்கட் பிரபுவே வைக்கமாட்டார். ஏனென்றால் நான் அவரோடு சரோஜா திரைப்படத்தில் வேலை செய்திருக்கிறேன்.
இசையை பொறுத்தவரை இன்று அனிருத் மேஜிக்தான் ட்ரெண்டு. சில படங்கள் அனிருத் இசைக்காக மட்டுமே ஓடுகிறது.
இந்த படத்தின் செகண்ட் ட்ராக் song குறித்து பல விமர்சனங்கள் வருவது உண்மைதான். ஆனாலும், இந்த பாடல்களை கேக்க கேக்க உங்களுக்கு பிடிக்கும்.
இந்த படம் கதையை நம்பியுள்ள படம். இந்த படத்திற்கு என்ன இசை தேவை, எந்த அளவு தேவை என்பதை இயக்குனரும், இசைய அமைப்பாளரும் நன்கு உணர்வார்கள்.
விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இந்த படம் இருக்கும். என் குருநாதர் விஜயகாந்த், விஜயோடு வரும் காட்சிக்காக அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.
விஜய் சாரின், நகைச்சுவை, ஹீரோயிசம், என எல்லாம் உள்ள படமாக இந்த படம் வந்துள்ளது என இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments