GOAT, தெறி மாஸ், இந்த படத்தோட 1st Version Rajini, Dhanush க்கு ரெடி பண்ணது.... ரவீந்திரன் சொல்லும் secret
Send us your feedback to audioarticles@vaarta.com
திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் Goat படத்தின் முதல் version ரஜினி மற்றும் தனுஷ்க்காக எழுதப்பட்டதாகவும், அப்போதே அதை அவர் கேட்டிருப்பதாகவும், இப்போது ட்ரைலர் பார்த்து மிரண்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் Indiaglitz பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்த படத்தை தளபதி விஜயின் அறிவுரையில் பெரிய விளம்பரம் இல்லாமல், தயாரிப்பு நிறுவனமும், இயக்குனரும் ரொம்ப கவனமா handle பண்ணிருக்காங்க. பெரிய hype குடுக்காம, படம் பேசட்டும்னு முடிவு பண்ணிருக்காங்க.
வெங்கட் பிரபு சார்க்கு ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து தளபதி படம் பண்ண வாய்ப்பு கிடைச்சிருக்கு, அவர் ScreenPlay வேற மாதிரி.
இந்த படத்தோட கதையை நான் ஏற்கனவே கேட்டிருக்கேன். அது ரஜினி சாருக்காகவும், தனுஷ் சாருக்காகவும் பண்ணது. தளபதிக்காக அதுல நிறைய மாற்றம் செஞ்சி வேற லெவெல்ல வந்திருக்கு.
இசையை பொறுத்தவரை யுவன் சாருக்கு ஒரு பிரஷர் இருந்திருக்கு. நிறைய நெகடிவ்வா பேசுறது எல்லாம் பார்க்கிறோம். படம் வரட்டும், அதுக்கு அப்பறம் ஒரு இம்பாக்ட் உருவாகும் அப்ப பார்க்கலாம்.
பொதுவாக retirement ஆகுறவங்க, சொதப்பிடுவாங்க ஆனால் தளபதி அடிச்சி தூக்கிருக்காரு. நிச்சயம் 100% guranteed சக்ஸஸ்.
இயக்குனரும், நடிகரும் இந்த படத்தில 100 % Guranteed Entertainemnt குடுத்துருக்காங்க.
மிகப்பெரிய நடச்சத்திரப்பட்டாளம் இந்த படத்துல இருக்குறதுனால 3 மணிநேர படம் நியாயமானதா இருக்கும். எல்லா நடிகர்களுக்கும் ஒரு space கொடுக்கணுமே.
இவ்வாறு இந்த பேட்டியில் அவர் பேசியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com
Comments