'சின்ன சின்ன கண்கள்' பாடலை ஒரிஜினலாக பாடியது சூப்பர் சிங்கர் பிரபலமா? ஆச்சரிய தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடலில் மறைந்த பவதாரணி குரல் ஏஐ மூலம் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த பாடலை ஒரிஜினலாக பாடியது சூப்பர் சிங்கர் பிரபலம் என்று தற்போது தெரியவந்துள்ளது.
மறைந்த பிரபல பாடகர் அல்லது பாடகியின் குரலை ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்த வேண்டும் என்றாலும் ஒரிஜினலாக ஒருவர் அந்த பாடலை பாடி அதன்பின் ஏஐ டெக்னாலஜி மூலம் மறைந்த பிரபலங்களின் குரலாக மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு ’லால் சலாம்’ திரைப்படத்தில் ஏஆர் ரகுமான் பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீத் குரலை டெக்னாலஜி மூலம் பயன்படுத்திய போது வேறு பாடகர்களை வைத்து ‘திமிறி எழுடா’ என்ற பாடலை பாடி அதன்பின் குரலை மட்டும் ஏஐ டெக்னாலஜி மூலம் மாற்றினார்.
அந்த வகையில் தான் ’சின்ன சின்ன கண்கள்’ பாடலும் உருவாக்கப்பட்ட நிலையில் இந்த பாடலை ஒரிஜினலாக பாடியது சூப்பர் சிங்கர் பிரபலம் பிரியங்கா என்பது தற்போது தெரியவந்துள்ளது. பல் மருத்துவரான பிரியங்கா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அதுமட்டுமின்றி அவ்வப்போது பல மேடைகளில் பாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எஸ் ஜானகி பாடிய ’சின்ன சின்ன வண்ணக்குயில்’ என்ற பாடலை அவர் தத்ரூபமாக ஜானகி போலவே பாடி பிரபலம் அடைந்தார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ’சின்ன சின்ன கண்கள்’ பாடலை பிரியங்கா பாடியிருக்க அந்த குரல் தான், பவதாரிணி குரலாக மாற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com