எதிர்பார்த்த அதே பாட்டு தான்.. 'கோட்' 3வது சிங்கிள் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த பாடல் ப்ரோமோ வீடியோ இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்றும் முழு பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி ஒரு புதிய ஸ்டில்லும் வெளியாகியுள்ள நிலையில் அதில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இருக்கும் காட்சிகள் உள்ளது.
ஏற்கனவே இந்த பாடல் விஜய் - மீனாட்சி சவுத்ரி டூயட் பாடல் என்று கூறப்பட்ட நிலையில் அந்த தகவல் தற்போது இந்த ஸ்டில் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விஜய் ஸ்டைலாகவும், கிளாமர் உடையில் மீனாட்சி சவுத்ரி அட்டகாசமாகவும் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Just 8 hours more to ignite you with #TheGoatThirdSingle promo 🔥
— AGS Entertainment (@Ags_production) August 2, 2024
Promo from Today 7 PM 😁
Song from Tomorrow 6 PM 💥@actorvijay Sir
A @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh… pic.twitter.com/1emfRljNuc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments