'கோட்' ரன்னிங் டைம் இவ்வளவா? விஜய்யின் முந்தைய படங்களின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தின் சென்சார் தகவல் சமீபத்தில் வெளியானது என்பதும் சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் கொடுத்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
‘கோட்’ படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரன்னிங் டைம் உள்ள இந்த படம் முதல் பாதி 1 மணி நேரம் 35 நிமிடங்கள் என்றும், இரண்டாவது பாதை 1 மணி நேரம் 24 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது.
தளபதி விஜய்யின் முந்தைய படங்களான ’மாஸ்டர்’ 2 மணி நேரம் 58 நிமிடங்கள், ‘பீஸ்ட்’ 2 மணி நேரம் 36 நிமிடங்கள், ’வாரிசு’ 2 மணி நேரம் 50 நிமிடங்கள் மற்றும் ’லியோ’ 2 மணி நேரம் 44 நிமிடங்கள் என இருந்தது. ஆனால் மேற்கண்ட நான்கு படங்களை விட ‘கோட்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக இருந்தாலும் வெங்கட் பிரபு 3 மணி நேரமும் திரையரங்கில் ரசிகர்களை உட்கார வைத்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments