நெட்பிளிக்ஸ் ஓடிடியில் 'கோட்' திரைப்படம்.. கண்டு ரசிக்கும் குடும்ப ஆடியன்ஸ்..!

  • IndiaGlitz, [Saturday,October 12 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரூ.450 கோடிக்கு மேல் திரையரங்குகளில் வசூல் ஆனது என்பது தெரிந்தது. திரையரங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘கோட்’ திரைப்படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் வெளியான நிலையில், இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் அல்லாமல், குடும்ப ஆடியன்ஸ் மிகவும் ஆர்வமாக பார்த்து வருவதாகவும், மிக அதிகமான நபர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற பெருமையை விரைவில் பெரும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ‘கோட்’ திரைப்படம் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை விரைவில் வெளியிட இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்களுக்கு இன்னொரு விருந்து காத்திருக்கிறது.

ஏற்கனவே விஜய்யின் ’லியோ’ திரைப்படத்திற்கு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ‘கோட்’ படத்திற்கு அதைவிட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

கேப்டன் விஜயகாந்த் ஏஐ காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை, படையப்பா, மங்காத்தா ஆகிய படங்களின் பின்னணியை இசையை கொண்டு உருவாகியுள்ள ‘கோட்’ திரைப்படம் ஒரு கமர்சியல் படம் என ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.

More News

ஆயுத பூஜை ஸ்பெஷல்: நயன்தாராவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் வைரல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

'ஜெயிலர்', 'கோட்' பட முதல் நாள் வசூலை முந்தியதா 'வேட்டையன்' ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் நாளில் வெளியேறிய சாச்சனா, 5வது நாளில் ரீஎன்ட்ரி.. பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்..!

பிக் பாஸ் வீட்டில் முதல் நாளில் வெளியேறிய சாச்சனா, ஐந்தாவது நாளில் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுத பூஜைக்கு வாழ்த்து.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக தலைவர் விஜய்..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து சொல்லாதது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

என்னால முடியாதுன்னு நிறைய பேர் சொல்றாங்க.. திருமணம் குறித்து நெப்போலியன் மகன் வீடியோ..!

நடிகர் நெப்போலியன் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் எனது திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இணையத்தில் பதிவாகி வருகிறது,