நாளை 'கோட்' ரிலீஸ்.. இன்று அமைச்சர் உதயநிதிக்கு நன்றி சொன்ன அர்ச்சனா கல்பாத்தி.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,September 04 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இன்று இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கோட்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாளை பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

’கோட்’ திரைப்படம் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கேட்டு தயாரிப்பாளர் தரப்பில் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில் தற்போது காலை 9 மணி முதல் அதிகபட்சமாக ஐந்து காட்சிகள் நாளை ஒரு நாள் மட்டும் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் ’கோட்’ திரைப்படம் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

எதிர்பார்ப்பை எகிற வைத்த மார்டின் படத்தின் சிங்கிள் பாடல் ஜீவன் நீயே: கண்களுக்கு விருந்து..!

இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.  "ஜீவன் நீயே",  எனும் இப்பாடல், மனதை துளைத்து இன்பம் பொங்க

கார்த்தியின் அடுத்த படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கேரக்டரா? ஆச்சரிய தகவல்..!

கார்த்தி நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கேரக்டர் இருப்பதாக கூறப்படுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது வேற லெவல் ட்விஸ்ட்.. 'கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் நடித்துள்ள நிலையில் தற்போது சிஎஸ்கே வீரரும் ஒரு சின்ன கேரக்டரில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார்

'கூலி' படத்தின் ரஜினி போஸ்டரில் உள்ள 1421 எண்ணிற்கு இதுதான் அர்த்தமா? பரபரப்பு தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு

இதுமட்டும் உண்மையானால் தமிழக முதல்வரின் 'கோட்' நகர்வாக இருக்கும்: வெங்கட் பிரபு

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி முடித்துள்ள நிலையில் தனது சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து இது மட்டும் உண்மையாக