'கோட்' தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியின் 'மன்னிப்பு' பதிவு.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி திடீரென தனது சமூக வலைத்தளத்தில் ’சாரி’ என பதிவு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஏற்கனவே செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றின் சமூக வலைதளத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ஒரு மிகப்பெரிய படத்தின் ரிலீஸ் தேதி தாமதமாக வாய்ப்பிருப்பதாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த பதிவுக்கு பதிலளித்த அர்ச்சனா கல்பாத்தி, ’இந்த தகவல் முற்றிலும் பொய், 24 மணி நேரமும் நாங்கள் ‘கோட்’ படத்திற்காக பணி செய்து வருகிறோம், காலதாமதமாக வாய்ப்பே இல்லை, பொய் செய்திகளை பரப்ப வேண்டாம்’ என்று தெரிவித்திருந்தார்
ஆனால் அதன் பிறகு அந்த பதிவில் ’தங்களுடைய பதிவில் ‘கோட்’ படம் என்று குறிப்பிடவில்லை என்பதை அறிந்தேன் என கூறி சாரி கேட்டுள்ள அர்ச்சனா கல்பாத்தி, அதே நேரத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ‘கோட்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று உறுதி அளித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Sorry just realized u had not tagged GOAT 🙈 We are on time guys Sep 5th worldwide
— Archana Kalpathi (@archanakalpathi) July 29, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com