அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு.. 'கோட்' படத்தின் சிங்கிள் பாடல்..!

  • IndiaGlitz, [Saturday,August 03 2024]

தளபதி விஜய் நடித்த ’கோட்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ஸ்பார்க் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவும் வர்ஷா பாலு என்பவரும் பாடி இருக்க, கங்கை அமரன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எதிர்பார்த்தது போலவே இந்த பாடல் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய இருவருக்கும் ஆன டூயட் பாடல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் விஜய்யின் அட்டகாசமான நடன ஸ்டெப்கள், மீனாட்சி சவுத்ரியின் கிளாமர் ஆகியவை இந்த பாடலில் இருப்பதை அடுத்து நிச்சயம் இந்த பாடல் திரையில் தோன்றும் போது ரசிகர்கள் எழுந்து நின்று ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் விஜய் ரசிகர்களை முழுமையாக திருப்தி செய்யும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:

அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு
என் முன்னால நடந்தா கேட் வாக்கு

நீ கையால போட்ட ஒரு பிரேக்கு
அட உன்னால ஆனேன் ஒரு வீக்கு
அய்யோ மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு
மருந்த வச்சியே

கனவுக்குள்ள வந்து வந்து கலக்கிபுட்டியே
கலங்குன மனச இப்ப தெளிய வப்பேனே
தெரிஞ்சதும் இருக்கும் மறுபடியும் வழக்கு

More News

அஜித்தின் 32 வருட சினிமா.. வாழ்த்துக்களுடன் பொங்கல் ரிலீஸை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்..!

அஜித் திரையுலகிற்கு வந்து 32 வருடங்கள் நிறைவு பெற்றதை அடுத்து கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு லைகா நிறுவனம் 'விடாமுயற்சி' படத்தின் புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்கள்

தமிழ் இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படம்.. தமிழ் உள்பட 5 மொழிகளில்..!

ஹாலிவுட் திரைப்படங்கள் போலவே தமிழ் உள்பட இந்திய மொழிகளிலும் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன என்பதும் குறிப்பாக தமிழ் திரை உலகில் இதனை லோகேஷ் கனகராஜ்

சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்துடன் மோதுவது இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதே தினத்தில் வெளியாகும்

மாலையில் 'கோட்' சிங்கிள்'.. காலையில் அஜித் தயாரிப்பாளர் வெளியிட்ட சூப்பர் தகவல்..!

இன்று மாலை விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் அஜித் பட தயாரிப்பு நிறுவனம் லைகா அதிரடியாக ஒரு சூப்பர்

எனக்கே தெரியாமல் என் படத்தில் ஒரு நிமிட காட்சி: விஜய் மில்டன் அதிர்ச்சி தகவல்..!

விஜய் ஆண்டனி நடித்த 'மழை பிடிக்காத மனிதன்' என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு நிமிட காட்சியை எனக்கே தெரியாமல் இடம் பெற்றுள்ளது