'கோட்' படத்தின் சூப்பர் அப்டேட் சொன்ன அர்ச்சனா கல்பாத்தி: ரசிகர்கள் கொண்டாட்டம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தின் சூப்பர் அப்டேட்டை இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்..
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் அடுத்தடுத்து டீசர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா ஆகியவற்றிற்கும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வெளியானது. ஏற்கனவே இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை விற்பனையாகி விட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது தமிழக ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி இந்த படத்தை தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். அஜித்தின் ’துணிவு’ உட்பட சில படங்களை ரிலீஸ் செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ திரைப்படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்கிறது என்பதும், அதேபோல் தமிழகத்தில் ‘கோட்’ படத்தை ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to announce #RomeoPictures has bagged the distribution rights of #TheGreatestOfAllTime for Tamilnadu!@actorvijay Sir #TheGreatestOfAllTime
— Archana Kalpathi (@archanakalpathi) July 5, 2024
A @vp_offl Hero#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh#GOAT @mynameisraahul @thisisysr @actorprashanth @PDdancing… pic.twitter.com/OzQrvk5pOL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout