வெங்கட்பிரபுவின் குறும்படம் தான் விஜய்யின் 'கோட்' படமா? இவ்வளவு ஒற்றுமை இருக்கிறதே..!

  • IndiaGlitz, [Sunday,April 21 2024]

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘லோகம்’ என்ற குறும்படம் தான் ‘கோட்’ படத்தின் கதை என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் ரஷ்யாவில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 'குட்டி ஸ்டோரி’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் வெளியான நிலையில் அதில் ’லோகம் ’ என்ற குறும்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார் என்பதும் பிக்பாஸ் வருண் நடித்திருந்த இந்த குறும்படத்தில் சில அனிமேஷன் கேரக்டர்களும் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ‘கோட்’ படத்தின் ஸ்டில்கள் மற்றும் இந்த படத்தின் வெளியான ‘விசில்போடு’ பாடலில் உள்ள சில வரிகளை பார்க்கும்போது அந்த ’லோகம் என்ற குறும்படத்தின் சாயல் இருப்பதை அடுத்து அந்த குறும்படம் தான் தற்போது ’கோட்’ படமாக உருவாகி இருக்கிறதா என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை படம் ரிலீசானால் தான் தெரிய வரும்.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.