விஜய்யின் 'கோட்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் 4 பிரபலங்கள்.. இவர் நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

  • IndiaGlitz, [Sunday,May 12 2024]

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் ‘கோட்’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் நடித்து வரும் நிலையில் ஒரு சிலர் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து கொண்டே வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. முதல் கட்டமாக இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பதாகவும் ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பதாகவும் கூறப்பட்டது. த்ரிஷாவும் இதனை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார்.

இதனை அடுத்து இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி மூலம் சில காட்சிகள் வர இருப்பதாகவும் அதற்கு பிரேமலதா ஒப்புதல் கொடுத்ததாகவும் கூட செய்திகள் வெளியானது. எனவே நீண்ட இடைவெளிக்கு பின் கேப்டனை அவரது ரசிகர்கள் ‘கோட்’ படத்தின் மூலம் திரையில் காணலாம்..

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் உரையாடல் காட்சி ஒன்று இந்த படத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது கிரிக்கெட் சம்பந்தமான காட்சி படமாக்கப்பட்டதாகவும் அதில் சில கிரிக்கெட் வீரர்கள் நடித்ததாகவும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சிலர் சிறப்பு தோற்றத்தில் நடித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவல் படி இயக்குனர் வெங்கட் பிரபுவும் சிறப்பு தோற்றத்தில் நடித்த காட்சிகள் வரும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. வெங்கட் பிரபு இந்த படத்தில் சிறப்பு காட்சியில் தோன்றுவது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் ஒரு மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் மற்றும் சிறப்பு தோற்றத்தில் தோன்றும் பிரபலங்கள் என ’கோட்’ திரைப்படம் பிரம்மாண்டத்தின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

More News

இனிமேல் சென்னை வேண்டாம்.. 'கோட்' இசை வெளியீட்டு விழா இடத்தை தேர்வு செய்த விஜய்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது விஜய், வெங்கட் பிரபு உள்பட படக்குழுவினர்

யாஷ் நடிக்கும் படத்தில் இணையும் 'வலிமை' நடிகை.. நயன்தாரா உண்டா? இல்லையா?

'கேஜிஎஃப்' நடிகர் யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அஜித்தின் 'வலிமை' படத்தில் நடித்த நடிகை இணைய

நற்பணி இயக்கம் குறித்து முக்கிய முடிவு.. அரசியலுக்கு அடித்தளம் போடுகிறாரா சூர்யா?

நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பதும் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் முதல் பாக்யராஜ், டி ராஜேந்தர் வரை ஏற்கனவே பலர் அரசியலுக்கு

சுப ரத்தினங்கள் மூலம் வாழ்வில் மாற்றம் வருமா ? சொல்கிறார் ஜோதிடர் பத்மப்பிரியா பிரசாத்

ஆன்மீக க்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு ஜோதிடர், ரெய்கி மாஸ்டர் மற்றும் உபரத்தின ஆலோசகர் பத்மப்பிரியா பிரசாத் அவர்கள் அளித்த பேட்டியில், மனிதனின்

அனைத்து தாய்மைக்கும் அன்னையர் தின அன்பான வாழ்த்துக்கள்

சுயநலமே இல்லாத உருவாய் துளியும் வெறுப்பை காட்டாத முகமாய் தன்னிலை மறந்த தன்னிகரற்ற தாய்மைக்கு தர அல்லது கொடுக்க நினைப்பது தான் என்னவோ ?பெரிதாக ஒன்றும் இல்லை...