எங்க வந்து யாரு கிட்ட.. 'கோட்' பட பாடல் வரிகளை பகிர்ந்த பாடலாசிரியர்..!

  • IndiaGlitz, [Saturday,August 31 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் மூன்று பாடல்கள் லிரிக் வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில் இன்று நான்காவது பாடல் லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலும் மற்ற பாடல்கள் போலவே மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பாடலின் சில வரிகளை பாடலாசிரியர் விவேக் சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் அந்த வரிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் பகிர்ந்த நான்கு வரிகள் இதோ:

மச்சி கெடா மஞ்ச சட்ட
மம்டி வரான் பள்ளம் வெட்ட
மட்ட மட்ட ராஜ மட்ட
எங்க வந்து யாரு கிட்ட

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.