சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. பவதாரிணி குரலில் என்ன ஒரு மெலடி.. 'கோட்' பாடல் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’கோட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ’ என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த பாடல் பவதாரிணி குரலை உண்மையாகவே கேட்கும் வகையில் இனிமையான மெலடி ஆக அமைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்க, விஜய், யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரிணி ஆகிய மூவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.
இந்த பாடல் முதல் முறை கேட்கும் போது அசத்தலாக உள்ளது என்றும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் மனதில் பதியும் வகையில் அமைந்துள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கண்டிப்பாக இந்த பாடல் அனைத்து தரப்பு இசை ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளது என்றும் நிச்சயம் இந்த பாடல் திரையில் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:
சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ
கருவறை மீண்டும் மணக்கிறதோ
எட்டு வைத்த வானம் வருகிறதோ
தித்திப்புயல் நெஞ்சில் மூள்கிறதோ ?
கண்ணே இனி ஒருபோதும் பிரிவே இல்லை
பிஞ்சே நீ ஒரு கோடி தாயின் பிள்ளை
உறவெல்லாம் ஒன்றாக
விழி எல்லாம் தேனாக
இருள் எல்லாம் தூளாக
பறவை கூட்டில் விண்மீன் பூக்க
வாராத மாமணியா வந்தாயே நீ வாழ்க
வந்தாயே நீ வாழ்க
மனசெல்லாம் ஒளி வீழ
உன் மீசை கூட மழலை பேச..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com