விஜய்யின் 'கோட்' படத்தின் 4 நாட்கள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,September 10 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியான நிலையில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் வசூல் நிலவரத்தை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கோட்’ . இந்த படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியான நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் முதல் நாள் இந்த படம் 126 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூல் செய்ததாகவும் இரண்டாவது நாளில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தை நான்கு நாள் வசூல் ரூபாய் 288 கோடி என்று அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த படம் 500 கோடி ரூபாய் வசூலை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். முன்னதாக இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய் என்று கூறப்பட்டது.

More News

ஒரே நாளில் மோதும் கமல் - அஜித் படங்கள்? த்ரிஷா ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷம்..!

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் கமல்ஹாசன் மற்றும் அஜித் படங்கள் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'வேட்டையன்' படத்தை அடுத்து மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய உண்மைக்கதை.. ஞானவேல் தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முடித்துள்ள 'வேட்டையன்' என்ற திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி முடித்துள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும்

'சூர்யா 44' படத்தில் பிரபல அப்பா-மகன் நடிகர்கள்.. வேற லெவல் தகவல்..!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த

'தளபதி 69' படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? 20 வருடங்களுக்கு முன் திரையுலகை கலக்கியவர்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான 'தளபதி 69' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளன.

'சிறகடிக்க ஆசை' ரோகிணி கணவரை பார்த்ததுண்டா? திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதில் அண்ணாமலை - விஜயாவின் மூத்த மருமகளாக ரோகிணி நடித்து வருகிறார்