சதீஷின் 'சட்டம் என் கையில்' படம் பார்த்த 'கோட்' பிரபலம்.. என்ன சொன்னார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்து, தற்போது ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சதீஷ் நடிப்பில் உருவான ’சட்டம் என் கையில்’ என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இன்று இந்த படத்தை பார்த்த ’கோட்’ படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சதீஷ், அஜய் ராஜ், மைம் கோபி, ரித்திகா, கேபிஒய் சரத், வித்யா பிரதீப், பவா செல்லதுரை, ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’சட்டம் என் கையில்’ திரைப்படம், ஒரே ஒரு இரவில் காவல் நிலையத்தில் நடக்கும் திகில் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் ஆறு நிமிட காட்சி வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சாச்சி இயக்கத்தில் ஜோன்ஸ் ரூபர்ட் இசையில், முத்தையா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய்யின் ‘கோட்’ படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இன்று சட்டம் என் கையில் படத்தை பார்த்து கூறியபோது, "நாளை வெளியாகும் ’சட்டம் என் கையி’ல் படத்தை பார்த்தேன். ஒரே இரவில் காவல் நிலையத்தில் நடக்கும் த்ரில் கதையம்சம் சிறப்பாக இருந்தது. பின்னணி இசை மிகவும் அருமை. இயக்குனர் சாச்சி அனைத்து நடிகர்களிடமும் மிகச்சிறந்த நடிப்பை பெற்றுள்ளார். சதீஷின் நடிப்பில் எதிர்பாராத மெருகை பார்க்க முடிந்தது. மொத்தத்தில், இந்த படத்தின் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்!" என்று தெரிவித்துள்ளார்.
Happened to see #SattamEnKayil which is releasing tomorrow!! One night thriller set in a police station!! Very interesting premise!! Great background score!! Brilliant work by dir @chachhi150003 unexpected performance @actorsathish @ajayraaj @mimegopi and team!! keeps u glued to… pic.twitter.com/JXyLHu8qOV
— venkat prabhu (@vp_offl) September 26, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments