சதீஷின் 'சட்டம் என் கையில்' படம் பார்த்த 'கோட்' பிரபலம்.. என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,September 26 2024]

தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்து, தற்போது ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சதீஷ் நடிப்பில் உருவான ’சட்டம் என் கையில்’ என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இன்று இந்த படத்தை பார்த்த ’கோட்’ படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சதீஷ், அஜய் ராஜ், மைம் கோபி, ரித்திகா, கேபிஒய் சரத், வித்யா பிரதீப், பவா செல்லதுரை, ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’சட்டம் என் கையில்’ திரைப்படம், ஒரே ஒரு இரவில் காவல் நிலையத்தில் நடக்கும் திகில் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் ஆறு நிமிட காட்சி வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சாச்சி இயக்கத்தில் ஜோன்ஸ் ரூபர்ட் இசையில், முத்தையா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய்யின் ‘கோட்’ படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இன்று சட்டம் என் கையில் படத்தை பார்த்து கூறியபோது, நாளை வெளியாகும் ’சட்டம் என் கையி’ல் படத்தை பார்த்தேன். ஒரே இரவில் காவல் நிலையத்தில் நடக்கும் த்ரில் கதையம்சம் சிறப்பாக இருந்தது. பின்னணி இசை மிகவும் அருமை. இயக்குனர் சாச்சி அனைத்து நடிகர்களிடமும் மிகச்சிறந்த நடிப்பை பெற்றுள்ளார். சதீஷின் நடிப்பில் எதிர்பாராத மெருகை பார்க்க முடிந்தது. மொத்தத்தில், இந்த படத்தின் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.

More News

'வேட்டையன்' படத்தில் அபிராமி கேரக்டர்.. சூப்பர் வீடியோ வெளியிட்ட லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

கணவருடன் சென்று ராகுல் காந்தியை சந்தித்த மேகா ஆகாஷ்.. என்ன காரணம்?

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை மேகா ஆகாஷ், தனது கணவருடன் சென்று

18 ஆண்டுக்கு பின் கிடைத்த விடை.. இதற்கும் விடை தாருங்கள் 007..  இயக்குனர்   சிம்புதேவன் பதிவு வைரல்..!

18 ஆண்டுகளுக்கு முன் ரிலீசான தனது படத்தின் புதிருக்கு விடையை கண்டுபிடித்து கொடுத்த இணையதள பயனாளி ஒருவரிடம் இயக்குனர் சிம்பு தேவன் 'அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட இ

சின்னத்திரையில் ஒரு புதிய முயற்சி.. திரைப்படமாகும் தொலைக்காட்சி தொடர்..!

திரைப்படங்கள் போலவே, சின்னத்திரை தொடர்கள் நாளுக்கு நாள் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. மதியம் முதல் இரவு வரை தொடர்ச்சியாக தொலைக்காட்சி

புரட்டாசி மாத ராசி பலன்கள் ஜோதிடர் குருஜி டாக்டர் வெணுஸ் பாலாஜி

பிரபல ஜோதிடர் குருஜி டாக்டர் வெணுஸ் பாலாஜி அவர்கள், லட்சுமி நரசிம்மர் வழிபாட்டின் சிறப்பு மற்றும் புரட்டாசி மாதத்தில் அவரை வழிபடுவதன் முக்கியத்துவம் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.