'கோட்' படத்தில் பட்டையை கிளப்பிய டான்ஸ் மாஸ்டர்.. 'தளபதி 69ல் இணைகிறாரா?

  • IndiaGlitz, [Wednesday,October 02 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய சேகர் மாஸ்டர், தளபதி 69 படத்திலும் ஒரு பாடலுக்காக நடன இயக்குனராக பணியாற்ற இருப்பதாக வெளிவந்த தகவல், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைக்க, உருவாகும் ’தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இதில் நடிக்கும் நட்சத்திரங்களை குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நேற்று, முதல் கட்டமாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இந்த படத்தில் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், இன்னும் நான்கு பிரபல நட்சத்திரங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ’தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் கட்டமாக, ஒரு பாடல் காட்சியை படமாக்க இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், அந்த பாடலின் நடன இயக்குனராக சேகர் மாஸ்டர் பணிபுரிவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இவர் ‘கோட்’ படத்தில் விஜய் - திரிஷா நடனமாடிய 'மட்ட' பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பதால், தளபதி 69 படத்திலும் அவர் பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

'பரிதாபங்கள்' லட்டு வீடியோ மீண்டும் பதிவேற்ற வேண்டும்: டிஜிட்டல் படைப்பாளிகள்

பரிதாபங்கள் யூடியூப் சேனலின் நிறுவனர்கள் கோபி சுதாகருக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை: தளபதி விஜய் பதிவு செய்த ட்வீட்..!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று தளபதி விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் உடல் நிலை எப்படி இருக்கிறது? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை

'தளபதி 69' படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் அறிவிப்பு.. முதல் அறிவிப்பே மாஸ்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 69' திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பு இன்று முதல் வெளியாக இருப்பதாக

3D டெக்னாலஜியில் வெளியாகிறது 'கங்குவா'.. உறுதி செய்த படக்குழுவின் பிரபலம்..!

சூர்யா நடித்த  'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.