ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான 'கோட்'.. விஜய் உள்பட பிரபலங்களின் சம்பளம் எவ்வளவு?

  • IndiaGlitz, [Wednesday,September 04 2024]

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் உட்பட மற்ற நட்சத்திரங்களின் சம்பளம் குறித்த தகவல் கசிந்து உள்ளது. இந்த தகவல் குறித்து தற்போது பார்ப்போம்.

‘கோட்’திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாக ஏற்கனவே தயாரிப்பாளர் கூறியிருந்த நிலையில் தற்போது மற்ற நட்சத்திரங்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் என்றும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிரபுதேவாவுக்கு 3 கோடி, பிரசாந்துக்கு 75 லட்சம், ஜெயராம் ஐம்பது லட்சம், அஜ்மல் 50 லட்சம், மோகன் 40 லட்சம், சினேகா 30 லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் த்ரிஷா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, லைலா வைபவ் உள்ளிட்டவர்களும் பெரும் தொகை சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாரானாலும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த படத்தின் பட்ஜெட் வசூல் ஆகிவிடும் என்றும் இந்த படம் மொத்தம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் விஜய் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

More News

திரைப்பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை.. பிரபல நடிகர் மீது பெண் புகார்..!

நடிகைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முன்னணி மலையாள நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக

விஜய், அஜித், சூர்யா பட தயாரிப்பாளர் காலமானார்.. சூர்யா நேரில் அஞ்சலி..!

விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்தவர் மற்றும் பழம்பெரும் நடிகர் மோகன் நடராஜன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையுலகினர்

சென்னையில் ஓர் திருச்செந்தூர் கோவில் : பக்தர்கள் சொல்லும் அனுபவங்கள்.!

ஆன்மீகக்ளிட்ஸ் சேனல், சென்னையின் எம்.ஜி.ஆர் நகரில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது.

சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்தும் திரையிட முடியாத நிலை.. 'கோட்' ரசிகர்கள் ஏமாற்றம்..!

'கோட்' படத்திற்கு 9 மணி காட்சி திரையிட அனுமதி கிடைத்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள 80 சதவீத திரையரங்குகள் சிறப்பு காட்சியை ரத்து செய்து விட்டதாக கூறப்படுவது

பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை.. என்ன காரணம்?

பாடகி சுசித்ரா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரபல நடிகையும் அவருடைய கணவரும் போதை பார்ட்டி நடத்தியதாக கூறிய நிலையில்