முதல்முறையாக  அந்தரத்தில் பறந்த அனுபவம்.. 'கோட்' பட நடிகையின் வைரல் பதிவு..!

  • IndiaGlitz, [Friday,May 24 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் நடிக்கும் நடிகை முதல் முறையாக அந்தரத்தில் பறந்த அனுபவம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் மீனாட்சி சவுத்ரி என்பதும் இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்த 'கொலை’, ஆர்ஜே பாலாஜியின் ’சிங்கப்பூர் சலூன்’ ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது விஜய்யின் ‘கோட்’ படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் சிரஞ்சீவி நடித்து வரும் ’விஸ்வாம்பரா’ உட்பட சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லினுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ள மீனாட்சி சவுத்ரி, பாராசூட்டில் பறந்த அனுபவம் குறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். முதல் முதலாக பாராசூட்டில் பறக்கிறேன், மிகவும் நன்றாக இருந்தது’ என்று அவர் பதிவு செய்துள்ள நிலையில், இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.