close
Choose your channels

நீச்சல் குளம், பீச்சில் 'கோட்' பட நாயகி.. தாய்லாந்து டூரின் தகதகக்கும் போட்டோஷூட்..!

Sunday, March 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் நாயகி ஆக நடித்து வரும் நடிகை சமீபத்தில் தாய்லாந்து சுற்றுப்பயணம் செய்திருக்கும் நிலையில் நீச்சல் குளம், பீச் உட்பட பல பகுதிகளில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில் அவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மீனாட்சி சேஷாத்திரி ஏற்கனவே விஜய் ஆண்டனியின் ‘கொலை’ உட்பட சில படங்களில் நடித்திருந்தாலும் தற்போது அவர் விஜய்யின் ‘கோட்’ படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீனாட்சி சவுத்ரி தாய்லாந்து சென்ற நிலையில் அங்கு இருந்து கொண்டே அவர் அழகான பீச், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எடுத்த கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வீடியோக்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஏற்கனவே ’கோட் ’படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் நடந்த நிலையில் அப்போது மீனாட்சி சவுத்ரியும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது அந்நாட்டில் உள்ள பல இயற்கை எழில் கொஞ்சம் இடங்களை பார்த்த பின்னர் அவர் மீண்டும் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்து சுற்றுலா சென்றிருக்கலாம் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment