close
Choose your channels

வெங்கடேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் இணைந்த 'கோட்' நாயகி.. துப்பாக்கியுடன் மாஸ் போஸ்டர்..!

Wednesday, July 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார் என்றும் வெங்கடேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் கணவன் மனைவியாக இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியானதை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் இதனை அடுத்து படப்பிடிப்பும் இன்றே தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் ’கோட்’ படத்தில் நாயகி ஆக நடிக்கும் நடிகைகளில் ஒருவரான மீனாட்சி சவுத்ரி இணைந்து உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது ஒரு அதிரடி ஆக்சன் படம் என்று கூறப்பட்ட நிலையில் மீனாட்சி சவுத்ரி போஸ்டரில் அவர் துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் மாஸ் லுக் இருப்பதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், வெங்கடேஷ் மனைவியாக நடிக்கும் நிலையில் முன்னாள் காதலியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த படத்தில் இன்னும் சில பிரபலங்கள் இணைய இருப்பதாகவும் அவர்களது விவரங்களும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பூஜை அன்றே ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.