ஊட்டியில் ஒரு மொட்டை மாடி நீச்சல் குளம்.. பிகினியில் பளபளக்கும் 'கோட்' நடிகை .. இன்ப அதிர்ச்சி வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,July 09 2024]

தளபதி விஜய் நடித்துள்ள ’கோட்’ படத்தில் நடித்த நடிகை ஊட்டியில் மொட்டை மாடி நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் ஜாலியாக குளிக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பார்வதி நாயர் அதன் பிறகு கமல்ஹாசனின் ’உத்தம வில்லன்’ பார்த்திபனின் ’கோடிட்ட இடங்களை நிரப்புக’ விஜய் சேதுபதியின் ’சீதக்காதி’ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது அவர் விஜய் நடித்துள்ள ’கோட் ’திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பார்வதி நாயர் இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது அவர் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வார். அந்த வகையில் சற்று முன் அவர் ஊட்டியில் சுற்றுப்பயணம் செய்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அதில் மொட்டை மாடி நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் ஜாலியாக குளிக்கும் வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.