அனுஷ்கா ஷெட்டியின் அடுத்த படத்தில் இணைந்த 'கோட்' நடிகர்.. ஜோடியாக நடிக்கிறார்களா?

  • IndiaGlitz, [Sunday,March 17 2024]

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா ஷெட்டி முதல் முதலாக ஒரு மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதையும் பார்த்தோம்.

’காதனர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை ரோஜின் தாமஸ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ராகுல் சுப்பிரமணியன் என்பவர் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்திற்காக அனுஷ்கா உடல் எடையை வேகமாக குறைத்ததாகவும் பூஜையில் அவர் ஸ்லிம்மாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் தற்போது புதிதாக பிரபுதேவா இணைந்துள்ளார். தற்போது விஜய்யின் ‘கோட்’ படத்தில் நடித்து வரும் பிரபுதேவா, இந்த படத்தில் இணைந்தது குறித்த புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அனுஷ்கா ஷெட்டி இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் பிரபுதேவா ஜோடியாக தான் அவர் நடிக்கிறாரா? அல்லது அவரது கேரக்டர் தனித்தன்மையுடன் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் அனுஷ்காவின் அடுத்த படத்தில் பிரபுதேவா இணைந்திருப்பதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது

 

More News

'ஊ சொல்றியா' பாடலில் நடிக்கும்போது பயந்து நடுங்கினேன்.. நடிகை சமந்தா

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் 'ஊ சொல்றியா' என்ற ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்தார் என்பதும் அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அந்த பாடலும்

25 வருட கனவு இன்று நனவாகிறது.. இன்று முதல் பணியை தொடங்குகிறேன்: விஷால் வீடியோ வைரல்..!

25 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு இன்று நினைவாகிறது என்று நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கஷ்டங்கள் தீர்க்கும் பைரவ வழிபாடு!

பைரவர், சிவபெருமானின் கோப உருவமாக வணங்கப்படும் தெய்வம். தீய சக்திகளை விரட்டி, நம்மை துன்பங்களில் இருந்து காப்பாற்றுபவர்.

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? குணநலன்கள், ஜாதகம், தீர்வுகள்!

இந்த ஆன்மீக Glitz வீடியோவில், ஜோதிடர் A.R. பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள், இந்திய ஜோதிடத்தில் செவ்வாய் தோஷம் பற்றி விளக்குகிறார்.

தொடர்ந்து நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து நித்யா பாலாஜி எழுப்பிய கேள்விகள்.

இந்த சமுதாயத்தில் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்த்து கரை சேர்ப்போம் என்று நினைக்கும்போது மிகவும் பதற்றமாக உள்ளது............