பிரச்சாரம் செய்யும் மோசமான திரைப்படம்… தி காஷ்மீர் ஃபைல்ஸ்-ஐ விளாசிய முக்கிய இயக்குநர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவாவில் நடைபெற்றுவந்த சர்வதேச திரைப்பட விழாவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்‘ திரைப்படம் திரையிடப்பட்டது தொடர்பாகப் பேசிய அவ்விழாவின் நடுவர், இது பிரச்சாரம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட நாகரிகமற்ற திரைப்படம் என்று விமர்சித்திருகிறார்.
கோவா தலைநகர் பனாஜியில் 53 ஆவது சர்வதேச திரைப்பட விழா கடந்த நவம்பர் 20 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்றுவந்த நிலையில் இதற்கான நிறைவுவிழா நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக ஸ்பெயின் மொழி திரைப்படம் தேர்வுசெய்யப்பட்ட நிலையில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திரையுலகப் பிரபலம் விருது தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச திரைப்பட விழாவிற்கான நிறைவு விழாவில் பேசிய தலைமை நடுவர் இஸ்ரேல் திரைப்பட இயக்குநர் நாதவ் லபிட், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து விமர்சித்து பேசியுள்ளார். அதில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1990 ஆம் ஆண்டில் ஏராளமானோர் கொல்லப்பட்டது தொடர்பான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இது பிரச்சாரம் செய்யும் வகையிலானது மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலானது என்றும் கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற விழாக்களில் இந்தப் படத்தை திரையிடுவது பொருத்தமானதாக இல்லை என்று கூறிய அவர் இந்நிகழ்வு எங்களுக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்தது என்றும் கூறியுள்ளார்.
மேலும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது என்பது கலை மற்றும் வாழ்க்கையில் அவசியமானது என்பதால் தனது கருத்தை வெளிப்படுத்துவதாகவும் இயக்குநர் நாதவ் லபிட் தெரிவித்துள்ளார்.
#IFFI #IFFI2022 @nfdcindia @ianuragthakur pic.twitter.com/GBhtw0tH6C
— Sudipto SEN (@sudiptoSENtlm) November 28, 2022
#IFFI #IFFI2022 @nfdcindia @ianuragthakur pic.twitter.com/GBhtw0tH6C
— Sudipto SEN (@sudiptoSENtlm) November 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout