ஒரே நேரத்தில் 3 சிகரங்களில் ஏறி சாதனை படைத்த 12 வயது சிறுமி…!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவா மாநிலத்தில் வசித்துவரும் 12 வயது சிறுமி ஒருவர் லடாக் பள்ளத்தாக்கில் இருக்கும் 6,000 மீட்டருக்கு மேல் அளவுள்ள 3 சிகரங்களில் அதுவும் 62.5 மணி நேரத்திற்குள் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் மலைக்க வைக்கும் எதிர்காலத் திட்டத்துடன் இவர் பயிற்சி செய்துவருவதும் ஆச்சர்யப்பட வைக்கிறது.
கோவாவில் உள்ள ஞாயன் விகாஸ் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்துவருபவர் குஞ்சன் பஞ்கஜ் பிரபு நர்வேகர். 12 வயதான இவர் மலையேறுவதில் பயங்கர ஆர்வத்துடன் சிறு வயது முதலே பயிற்சி எடுத்துவருகிறார். இதையடுத்து லடாக் மாநிலத்தின் மார்கா பள்ளத்தாக்கில் இருக்கும் காங் யாட்சே-II (6250 மீ), மவுண்ட் ரேபோனி மல்லாரி – I (6097 மீ), மவுண்ட் ரெபோனி மல்லாரி-II (6113 மீ) ஆகிய 3 சிகரங்களையும் வெறுமனே 62.5 மணி நேரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
ஒவ்வொரு சிகரமும் 6,000 மீட்டருக்கு மேலுள்ள நிலையில் 3 சிகரத்தையும் ஒரே நேரத்தில் ஏறி சாதனை படைத்துள்ள குஞ்சன் பஞ்கஜ் தற்போது இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். மேலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதுதான் தன்னுடைய வாழ்நாள் சாதனையாக இருக்கும் என்றும் கூறியுள்ள அவர் அதற்காக கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறாரார் குஞ்சன் பங்கஜ்.
மேலும் இந்தியாவில் 16 வயது நிரம்பி இருந்தால் மட்டுமே 7,000 மீட்டருக்கு மேலுள்ள சிகரங்களில் ஏற முடியும் என்று கூறப்பட்டு உள்ள நிலையில் இதற்காக வெளியே இருந்து மலையேற்றத்தில் ஈடுபடவும் முயற்சித்து வருகிறாராம்.
12 வயது 3 சிகரங்களில் ஏறி சாதனை படைத்துளள இவர் தன்னுடைய அனுபவத்தை குறித்து பேசும்போது, வானிலை மோசமாக இருந்தது. இந்த மாதம் பனி பெய்யும் என்று எதிர்பார்க்காததால் நாங்கள் சென்றபோது தெளிவான வானத்தை எதிர்பார்த்தோம். அதிக பனிப்பொழிவு இல்லை. குறைந்த பனிப்பொழிவு காரணமாக அது மிகவும் கடினமாக இருந்தது. நடக்கும்போது நம் கால்கள் பனியில் முழங்கால் நீளத்திற்கும் சில இடங்களில் இடுப்பு நீளத்திற்கும் செல்லும், அதை அகற்றுவது எங்களுக்கு மிகவும் சோர்வாக இருக்கும். ஆனால் நாங்கள் எந்த காயத்தையும் சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குஞ்சன் பஞ்கஜ் உலகத்திலேயே பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரம் மற்றும் அன்னபூர்ணா சிகரம் இரண்டிலும் ஏறி இந்த நாட்டிற்கும் தனது பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout