கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்
- IndiaGlitz, [Sunday,March 17 2019]
மூன்று முறை கோவா மாநிலத்தின் முதலமைச்சராகவும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த மனோகர் பாரிக்கர் கடந்த சில மாதங்களாக கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 63.
இந்தியாவின் முதல் ஐஐடி பட்டாதாரியான கோவா முதல்வர் மறைந்த மனோகர் பாரிக்கர் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு நாளை மத்திய அமைச்சரவை சார்பில் இரங்கல் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.