அங்க போயுமா??? உயர்சாதி இந்துக்கள் சாதிப்பாகுபாடு காட்டடுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிஸ்கோ சிண்டம்ஸ் இன்க் (CSO.Co) நிறுவனத்தில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு வேலைப்பார்க்கும் உயர் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த பணியாளர்கள் மீது தொடர்ந்து பாகுபாடு காட்டி வருவதாகக் குற்ற வழக்கு ஒன்று பதிவாகி இருக்கிறது. சிஸ்கோ நிறுவனத்தில் 1000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா சென்ற பிறகும் வகுப்பு பேதம் காட்டப்படுவது தொடருகிறது எனக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. வேலைப் பார்க்கும் இடங்களில் இந்தப் பாகுபாடு மேலும் சிக்கலை உண்டாக்குகிறது என்றும் வழக்குப் பதிவில் குறிப்பிடப் பட்டு இருக்கிறது.
அமெரிக்க சட்ட அமைப்பில் சாதி போன்ற நுட்பமான இந்திய கலாச்சாரங்களை குறிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் எதுவும் இல்லை. எனவே வேலை வாய்ப்பு நலன் மற்றும் வீட்டு வசதி குறைபாடு போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் சிஸ்கோ நிறுவனத்தில் வேலைபார்க்கும் இந்துக்கள் உயர் வகுப்பு சார்ந்தவர்களாக இருக்கின்றனர் என்றும் அவர்களால் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. வழக்குப் பதிவு செய்யப் பட்ட நபர்களின் பெயர்களை இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் சான் ஜோன்ஸ் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த ஒருவர் சிஸ்கோ நிறுவனத்தில் பல ஆண்டுகளாக வேலைப் பார்த்து வருவதாகவும் அவர் தன்மீது தொடர்ந்து பாகுபாடு காட்டப்படுகிறது எனக் குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி இனப்பாகுபாட்டால் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தியர்கள் சாதிப் பாகுபாட்டுடன் நடந்து கொள்வது குறித்த வழக்கு ஒன்று பதிவு செய்யப் பட்டு இருக்கிறது. இதனால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் கடும் பதற்றம் நிலவி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout