ரத்தம் கொட்டிய நிலையிலும் படப்பிடிப்பை தொடர்ந்து அருண் விஜய்: இயக்குனர் ஆச்சர்யம்

  • IndiaGlitz, [Wednesday,March 04 2020]

கோலிவுட் திரையுலகில் ஒரு சில நடிகர்கள் லேசான காயம் ஏற்பட்டாலே படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று விடும் நிலையில் படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டிய நிலையிலும் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து முடித்து கொடுத்ததாக அருண் விஜய் குறித்து இயக்குனர் ஜிஎன்ஆர் குமாரவேலன் பெருமையாக கூறியுள்ளார்.

இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்து வரும் திரைப்படம் ’சினம்’.இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பல்லக் லால்வானி என்பவர் நடத்தி வருகிறார். அருண்விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் அருண்விஜய் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேலன் கூறியபோது ’இந்த படம் விரைவாக முடிப்பதற்கு அருண்விஜய்யின் மிகப்பெரிய ஒத்துழைப்பு தான் காரணம். அவர் தரும் உழைப்பு அர்ப்பணிப்பு எனக்கு பிரமிப்பைத் தருகிறது. குறிப்பாக ஒரு ஆக்ஷன் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென அருண்விஜய்க்கு எதிர்பாராதவிதமாக அடிபட்டுவிட்டது. இரத்தம் சொட்டிக் கொண்டிருந்த நிலையிலும் கூட அவர் ஓய்வெடுக்காமல் உடனடியாக அடுத்த காட்சிக்கு தயாராகி அந்த காட்சியை நடித்து முடித்து, அதன் பின்னரே அவர் முதலுதவி எடுத்து கொண்டார். அவருடைய கடுமையான உழைப்பு தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த இடத்துக்கு அவர் முற்றிலும் தகுதியானவர் என்று குறிப்பிட்டுள்ளார் சினம் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்றும் தீனார் குமாரவேலன் தெரிவித்துள்ளார்.