தமிழ்நாட்டை விட்டே சென்றுவிடுவேன்: ஞானவேல்ராஜா கூறியது ஏன்?

  • IndiaGlitz, [Tuesday,April 24 2018]

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஞானவேராஜா. இவரது தயாரிப்பில் அல்லு அர்ஜூன் நடித்த '‘என் பெயர் சூர்யா... என் வீடு இந்தியா’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அபேசிய ஞானவேல்ராஜா கூறியதாவது: ‘தெலுங்கு திரைப்பட உலகம் தான் சிறப்பாக இருக்கிறது. அனைவரும் அதிகம் லாபம் சம்பாதிக்கிறார்கள். ஒரு படத்தின் பட்ஜெட் 100 கோடி என்றால், அங்குள்ள நடிகர்கள் சம்பளம் 10 அல்லது 15 கோடி தான் சம்பளம் வாங்குகிறார்கள். படத்தையும் பிரம்மாண்டமாக கொடுக்கிறார்கள். ஆனால், இங்குள்ள நடிகர்கள் 100 கோடி பட்ஜெட் என்றால், படத்தின் நாயகனே 50 கோடி சம்பளம் கேட்கிறார். மீதியிருக்கும் பணத்தில் எப்படி படத்தை பிரம்மாண்டமாக எடுக்க முடியும்.

அதுமட்டுமில்லாமல், தெலுங்கு நடிகர்கள் முன்பணமாக 50 லட்சம் கொடுத்தால் போதும். ஆனால், இங்கு முன்பணமாக 10 கோடி கேட்கிறார்கள். இதனால், தயாரிப்பாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. 

நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். இதற்காக ஒரு குழு அமைத்து சம்பளத்தை வரைமுறை படுத்த வேண்டும். இதை நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சரி செய்வார் என்று நம்புகிறேன். இந்த சூழ்நிலை மாறவில்லை என்றால், தெலுங்கு படங்களை தயாரிக்க அங்கு சென்றுவிடுவேன். ஏற்கனவே அங்கு அலுவலகம் வாங்கி விட்டேன். ஏனென்றால் நஷ்டத்தில் படம் தயாரிப்பதைவிட லாபத்தில் படம் தயாரிக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள்

இவ்வாறு ஞானவேல்ராஜா பேசினார்.

More News

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி தற்கொலை!

சென்னையில் கடந்த சில நாட்களாக காவல் துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

எச்.ராஜா, கனிமொழி கேள்விகளை ரஜினிகாந்த் தவிர்ப்பது ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் சற்றுமுன் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிர்மலாதேவி விவகாரம் குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்த்,

எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூலில் ஃபார்வேடு செய்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிர்மலாதேவி விவகாரம்: ரஜினி கூறிய கருத்து

கடந்த சில நாட்களாக அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மலாதேவியும், ரகசிய பங்களாவும்: பரபரப்பு தகவல்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிர்மலாதேவி விவகாரத்தில் தோண்ட தோண்ட புதியதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.