இளையராஜா-எஸ்பிபி பிரச்சனை எங்களை யோசிக்க வைத்துவிட்டது. ஞானவேல்ராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா மற்றும் பாடகர் எஸ்பிபி ஆகிய இருவருக்கும் இடையே எழுந்துள்ள காப்புரிமை பிரச்சனை பல துறையினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டது என்றே கூற வேண்டும். இசைத்துறையில் இருந்து மட்டுமின்றி பல்வேறு துறையினர்களும் ஏன் நாமும் காப்புரிமை கேட்கக்கூடாது என்று யோசிக்க தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில் இன்று மதுரையில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: இளையராஜா-எஸ்பி பாலசுப்பிரமணியம் பிரச்சனை எங்களை யோசிக்க வைத்துவிட்டது. இனிமேல் தொலைக்காட்சிகளுக்கு எங்கள் படத்தின் காமெடி, பாடல்களை இலவசமாக தூக்கி கொடுக்காமல், ஏன் காப்புரிமை கேட்கக்கூடாது என்று தோன்றுகிறது' என்று கூறினார்.
மேலும் 12 வாக்குறுதிகளுடன் இந்த தேர்தலை சந்திப்பதாகவும், தங்கள் அணி வெற்றி பெறும் என உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறினார். இந்த பேட்டியின்போது இயக்குனர் மிஷ்கின், பாண்டிராஜ், பிரபு, பிரகாஷ்ராஜ், செல்வா ஆகியோர் உடனிருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments