கணவர்களை துரத்தாதீர்கள், நடிகைகளுக்கு ஞானவேல்ராஜா மனைவி எச்சரிக்கை

  • IndiaGlitz, [Wednesday,March 21 2018]

திருமணம் ஆகாத எத்தனையோ இளைஞர்கள் திருமணத்திற்கு தயாராக இருக்கும் நிலையில் ஒருசில நடிகைகள், திருமணமானவர்களை குறிவைத்து குடும்பத்தை உடைப்பதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா ஞானவேல்ராஜா இதுகுறித்து பதிவு செய்த ஒரு டுவீட் கோலிவுட் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நேஹா ஞானவேல்ராஜா ஒரு டுவீட்டில், 'திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்கும் பெண்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள் என்றும் அவர்கள்  வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருப்பதாகவும், இம்மாதிரியான நடிகைகளின் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்றும் பதிவு செய்திருந்தார். பின்னர் இந்த டுவீட்டை நீக்கிவிட்டு இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இன்னொரு கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் கூறிய அந்த கருத்து எனது குடும்ப பிரச்சனை குறித்து அல்ல. எனக்கும் என் கணவருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் என்னை சுற்றி நடக்கும் ஒருசில விஷயங்கள் என்னை பாதித்துள்ளது. ஒருசில நடிகைகள் திருமணமான ஆண்களின் வாழ்க்கையில் விளையாடி அந்த குடும்பத்தின் அமைதியை குலைத்து விடுகின்றனர்.

ஒரு பெண் இதுகுறித்து தைரியமாக பேச முன்வந்தால் பொதுமக்கள் இதனை லீக் என்று கூறுகின்றனர். நான் யாருடைய கவனத்தை ஈர்க்கவும், டிராமா செய்யவும் முயலவில்லை. என்னுடைய டுவீட் காரணமாக என்னுடைய கணவர் குறித்து வந்து சில கமெண்ட்டுக்கள் காரணமாகவும் இதுவொரு சென்சிட்டிவ் பிரச்சனை என்பதை புரிந்து கொண்டதாலும் அந்த டுவீட்டை நான் நீக்கினேன். அதே நேரத்தில் இதுமாதிரியான பெண்களுக்கு அந்த டுவீட் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். சமூகவலைத்தளம் என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்று நேஹா ஞானவேல்ராஜா பதிவு செய்துள்ளார்.

 

More News

டிஜிபி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற காவலர்கள்: சென்னையில் பரபரப்பு

மன உளைச்சல் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் இன்று இரண்டு காவலர்கள் சென்னை டிஜிபி அலுவலகம் முன்பே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது: தமிழிசை பொங்கியது ஏன்?

தமிழிசை செளந்திரராஜன் பொதுவாக செய்தியாளர்களிடம் பேசும்போது அமைதியாக பேசுவார். ஆனால் இன்று நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என்று அவரே பொங்கி பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை: கவுதம் மேனன்

கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. அது அவருடைய உரிமை. ஆனால் நான் அவரிடம் இருந்து நல்ல திரைப்படங்களை விரும்புகிறேன்

அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடி! அதிர்ச்சியில் தொண்டர்கள்

திண்டுக்கல் அருகே உள்ள அதிமுக கொடிக்கம்பத்தில் அதிமுக கொடிக்கு பதிலாக பாஜக கொடி பறந்ததால் அந்த பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது ஆண்டவன் கொடுத்த வாய்ப்பு: ரஜினி வெளியிட்ட வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இமயமலையில் இருந்து சென்னை திரும்பினார் என்பதும் அதன்பின்னர் அளித்த பேட்டியில் தனக்கு பின்னால் ஆண்டவனை தவிர யாரும் இல்லை என்று கூறியதையும் பார்த்தோம்