கணவர்களை துரத்தாதீர்கள், நடிகைகளுக்கு ஞானவேல்ராஜா மனைவி எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணம் ஆகாத எத்தனையோ இளைஞர்கள் திருமணத்திற்கு தயாராக இருக்கும் நிலையில் ஒருசில நடிகைகள், திருமணமானவர்களை குறிவைத்து குடும்பத்தை உடைப்பதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா ஞானவேல்ராஜா இதுகுறித்து பதிவு செய்த ஒரு டுவீட் கோலிவுட் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நேஹா ஞானவேல்ராஜா ஒரு டுவீட்டில், 'திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்கும் பெண்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள் என்றும் அவர்கள் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருப்பதாகவும், இம்மாதிரியான நடிகைகளின் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்றும் பதிவு செய்திருந்தார். பின்னர் இந்த டுவீட்டை நீக்கிவிட்டு இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இன்னொரு கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் கூறிய அந்த கருத்து எனது குடும்ப பிரச்சனை குறித்து அல்ல. எனக்கும் என் கணவருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை. ஆனால் என்னை சுற்றி நடக்கும் ஒருசில விஷயங்கள் என்னை பாதித்துள்ளது. ஒருசில நடிகைகள் திருமணமான ஆண்களின் வாழ்க்கையில் விளையாடி அந்த குடும்பத்தின் அமைதியை குலைத்து விடுகின்றனர்.
ஒரு பெண் இதுகுறித்து தைரியமாக பேச முன்வந்தால் பொதுமக்கள் இதனை லீக் என்று கூறுகின்றனர். நான் யாருடைய கவனத்தை ஈர்க்கவும், டிராமா செய்யவும் முயலவில்லை. என்னுடைய டுவீட் காரணமாக என்னுடைய கணவர் குறித்து வந்து சில கமெண்ட்டுக்கள் காரணமாகவும் இதுவொரு சென்சிட்டிவ் பிரச்சனை என்பதை புரிந்து கொண்டதாலும் அந்த டுவீட்டை நான் நீக்கினேன். அதே நேரத்தில் இதுமாதிரியான பெண்களுக்கு அந்த டுவீட் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். சமூகவலைத்தளம் என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என்று நேஹா ஞானவேல்ராஜா பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments