'இறைவி' பிரச்சனை குறித்து ஞானவேல்ராஜா கருத்து

  • IndiaGlitz, [Tuesday,June 07 2016]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' திரைப்படத்தில் தயாரிப்பாளர்களை அவமதிக்கும் வகையில் கருத்து கூறப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் இயக்குனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா இந்த பிரச்சனை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'இறைவி' படம் குறித்து தயாரிப்பாளர்கள் கூறி வரும் கருத்துக்கு நான் முழுதாக உடன்படுகிறேன். என்னுடைய கருத்தும் அதேதான். எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் சி.வி.குமாரின் ஒத்துழைப்பால் இயக்குனரானவர் கார்த்திக் சுப்புராஜ்.

இரண்டாவது படமான 'ஜிகர்தண்டா' படத்தின்போதே கார்த்திக் சுப்புராஜ் தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரை பெருந்துன்பத்திற்கு ஆழ்த்தினார். இருந்தும் 'இறைவி' படத்தை தனது சக்திக்கு மீறி பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க சி.வி.குமார் சம்மதம் தெரிவித்தார். ஆனால் கார்த்திக் சுப்புராஜ் தான் முதலில் கூறிய பட்ஜெட்டிற்குள் படத்தை முடிக்காமல் பெரிய பட்ஜெட்டில் படத்தை முடித்துள்ளார்.

இந்த படம் முடிந்த பின்னர் சி.வி.குமார் இந்த படத்தை பார்த்தபோது தற்போது மற்ற தயாரிப்பாளர்கள் கூறி வரும் நிலைதான் அவருக்கும் இருந்தது. ஆனால் வேறு வழியில்லாமல் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்கவே அவர் இந்த படத்தை மனவலியுடன் ரிலீஸ் செய்தார். கண்டிப்பாக தயாரிப்பாளர் சங்கம் கார்த்திக் சுப்புராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு என்னுடைய முழு ஒத்துழைப்பு கண்டிப்பாக இருக்கும்' இவ்வாறு ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.

More News

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' சென்சார் தகவல்கள்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள...

சூர்யாவின் 'சிங்கம் 3' கிளைமாக்ஸ்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கி வரும் சிங்கம் 3' என்ற 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...

'கபாலி'யின் தெலுங்கு ரிலீஸ் வியாபாரம் குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் கன்னட ரிலீஸ் உரிமையை 'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மிகப்பெரிய தொகை கொடுத்த பெற்றுள்ளார்...

சூர்யா பாணி வில்லன் கேரக்டரில் விமல்

பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற நடிகர் விமல் இதுவரை கிட்டத்தட்ட ரொமான்ஸ் மற்றும் கிராமத்து அப்பாவி வேடங்களை மட்டுமே ஏற்று நடித்துள்ளார்...

தனுஷின் 'தொடரி' டிராக்லிஸ்ட்.

தனுஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய 'தொடரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது...