தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். கடந்த நவம்பர் 11 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டது. மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர் உடல்நலம் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். அதையடுத்து சாதாரண வார்டுக்கும் அவர் மாற்றப்பட்டார். கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். ஆனால் மருத்துவச் சிகிச்சை பலனின்றி ஞானதேசிகனின் உயிர் இன்று மதியம் 2.20 மணிக்கு பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவரது இறப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout