தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்!

  • IndiaGlitz, [Friday,January 15 2021]

 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். கடந்த நவம்பர் 11 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டது. மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர் உடல்நலம் தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். அதையடுத்து சாதாரண வார்டுக்கும் அவர் மாற்றப்பட்டார். கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். ஆனால் மருத்துவச் சிகிச்சை பலனின்றி ஞானதேசிகனின் உயிர் இன்று மதியம் 2.20 மணிக்கு பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவரது இறப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

More News

சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் முதல்வர்

மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்த முதல் வெற்றி: கைதட்டி கொண்டாடிய கமல்!

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தப் பொதுத் தேர்தலில் கமலஹாசனின் மக்கள் மய்யம் மையம் கட்சி போட்டியிடுகிறது

நாம் விழித்துக்கொள்ள வேண்டிய கடைசி நேரம்: தமிழ் நடிகரின் பொங்கல் பதிவு!

தமிழ் திரையுலகில் ஹீரோ, குணசித்திர கேரக்டர்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகர்களில் ஒருவராகிய ராஜ்கிரண், தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பொங்கல் வாழ்த்தில்

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடக்கூடாதா??? என்ன காரணம்?

அவசர கால அடிப்படையில் இந்தியா முழுவதும் நாளை முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது

ஷிவானி எடுத்த அதிரடி முடிவால் ரசிகர்கள் ஏமாற்றம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே ஷிவானி நாராயணன் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனவர் என்பதும் அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள்