அழிவின் விளிம்பில் இருக்கும் உலகம்? ரெட் அலர்ட் விடுக்கும் பகீர் அறிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபகாலமாகப் பூமியில் வரலாறு காணாத அளவிற்கு அதிக வெப்பம், அதிக மழை, அனல் காற்று அதிகரித்து இருப்பது போன்ற தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் சீனா, ஜெர்மனியில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது அமெரிக்கா, துருக்கி, கிரீஸ், பொலிவியா போன்ற நாடுகளில் ஆங்காங்கே வெப்பம் அதிகரித்து இதனால் காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன.
மேலும் கஜகஸ்தான், வடகொரியா போன்ற நாடுகளில் இயற்கை வளம் குன்றி வறுமை தலைவிரித்தாடுகிறது. இதுபோன்ற நிலைமைக்கு பருவநிலை மாற்றமே காரணம் என்று விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் 237 உலக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு 3,000 பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த அறிக்கையில் பூமியில் முன்பைவிட வெப்பம் அதிகரித்து இருப்பதாகவும் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த வெப்பத்தின் அளவு 1.5 டிகிரி செல்சியஸ் அளவாக அதிகரித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளனர். இதனால் உலகத்திற்கே பல கேடான விஷயங்கள் நடக்க இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
மேலும் பருவநிலை மாற்றம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐ.நாவின் பொதுச்செயலாளர் இது “மனிதக்குலத்துக்கான சிவப்பு குறியீடு” எனக் கூறியிருக்கிறார். மேலும் புவியின் வெப்பம் அதிகரித்து இருப்பதால் இனிமேல் வெப்ப அலைகள், அதிக மழை, வறட்சி போன்றவை பரவலாக காணப்படும் என ஐபிசிசி தகவல் வெளியட்டு உள்ளது.
இந்த வெப்பநிலை காரணங்களால் முன்னதாக 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனல்காற்று வீசிவந்தது. தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அனல்காற்று மக்களை வாட்டியெடுக்கிறது. தற்போது மேலும் பூமியின் வெப்பம் அதிகரித்து கொண்டுவருவதால் இனிமேல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத்தில் ஆங்காங்கே அனல் காற்றும், அதனால் காடுகள் அழிவது போன்ற இயற்கை பேரிடர்களைக் காண முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் பூமியின் வெப்பம் மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிடும் என விஞ்ஞானிகள் கூறி இருப்பது குறித்து உலகத் தலைவர்கள் பலரும் வருத்தம் வெளியிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே கார்பன்-டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுமையில்லா வாயுக்களின் அளவை குறைக்க வேண்டும் என்ற குரல் வலுத்துவருகிறது.
மேலும் காடுகளை அழிப்பது, அதிக புகை வரும் வாகனங்களை பயன்படுத்தி காற்றை மாசுபடுத்துவது போன்ற செயல்களைக் குறைக்குமாறு உலகத் தலைவர்களுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது. பூமியில் ஏற்படும் அதிக வெப்பம் இயற்கை பேரிடர்களை ஏற்படுத்துவதோடு எதிர்கால சந்ததியினரின் வாழ்வியலையே கேள்விக்குறி ஆக்கிவிடும் என்றும் எச்சரிக்கை தொடர்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com