'சூரரை போற்று' ஓப்பனிங் ரீல் இதுதான்: ஜிவி பிரகாஷ் வெளியிட்ட வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,October 17 2020]

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரை போற்று’திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த படத்தின் ஒருசில பாடல்கள் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே ஜிவி பிரகாஷ் அறிவித்த நிலையில் தற்போது அவர் ஒரு ’சூரரை போற்று’படத்தின் ஓபனிங் ரீல்களின் பேக்ரவுண்ட் மியூசிக் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

ஆரம்ப ரீல்களிலேயே அட்டகாசமான பேக்ரவுண்டு இசையுடன் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ள இந்த படத்தில் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது