வந்துவிட்டது கொரோனாவுக்கு புதிய சிகிச்சை மருந்து: இந்திய மருந்து நிறுவனம் சாதனை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா சிகிச்சைக்கு இந்தியாவில் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மருந்து எதுவும் அறிவிக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் கிளென்மார்க் என்ற நிறுவனம் கொரோனாவின் ஆரம்பக் கட்ட சிகிச்சைக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஒரு மருந்தை அறிமுகப் படுத்தியிருக்கிறது. ஃப்ளூ காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் “பேவிபிரவிர்” என்ற மருந்து கொரோனாவின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு நல்ல பலனை தருவதாக இந்திய மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் இந்த மருந்துக்கு அங்கீகாரம் அளித்து ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து ஒரு மாத்திரை 103 ரூபாய் என கிளென்மார்க் நிறுவனம் விலை நிர்ணயம் செய்து இருக்கிறது.
“பேவிபிரவிர்” மருந்து இதுவரை மருத்துவ ரீதியாக கொரோனா நோயாளிகளுக்கு பெரிய அளவில் சோதனை செய்து பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய மருத்துவ இயக்குநரகம் கொரோனா சிகிச்சைக்கு வழங்கலாம் எனவும் ஒப்புதல் அளித்து இருக்கிறது. கிளென்மார்க் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த மருந்தை நாட்டின் உள்ள அனைவருக்கும் கிடைக்குமாறு வழிவகை செய்யப்படும் எனவும் தற்போது அதிகாரிகள் நம்பிக்கை அளித்து இருக்கின்றனர். முன்னதாக இந்த மருந்து பேபிஃப்ளூ எனப்படும் வைரஸ் காய்ச்சலுக்கு பயன்படுத்தப் பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட மருந்து தற்போது விற்பனைக்கு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் புது நம்பிக்கை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு வைட்டமின் மாத்திரைகள் மட்டுமே வழங்கி வந்த நிலையில் இந்த மருந்தைக் கொண்டு கொரோனா நோயை முழுவதுமாகக் கட்டுப்படுத்தலாம் எனவும் மருத்துவர்கள் நம்பிக்கை அளித்து வருகின்றனர். மேலும் இது மாத்திரை வடிவிலும் கிடைப்பதால் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கும் கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனவும் நம்பப்படுகிறது.
தற்போது கொரோனா நோயாளிகளுக்கு ஊசி வடிவில் கொடுக்கப்பட்டு வருகிறது. நோய்த்தாக்கிய முதல் நாளில் 1800 எம்ஜி அளவு கொண்ட மருந்து இரண்டு வேளைக்கு கொடுக்கப்படுதாகவும் இரண்டாவது நாளில் 800 எம்.ஜி அளவு கொண்ட மருந்து இரண்டு வேளைக்கும் கொடுக்கப் படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளர். 800 எம்ஜி மருந்தை தொடர்ந்து 14 நாட்கள் வரையிலும் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் மருந்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இந்த முறைகளில் பயன்படுத்தும்போது கொரோனா நோய்த்தொற்றை 4 நாட்களில் கட்டுப்படுத்த முடியும் எனவும் மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். வைரஸ் கிருமி உடலுக்குள் சென்று பல்லாயிரக்கணக்கான அளவில் பிரதி யெடுப்பதை இந்த மருந்து முழுமையாக கட்டுப்படுத்துகிறது. இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com