மதம் மாறி திருமணம் செய்த பிரபல கிளாமர் நடிகை.. ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Sunday,June 11 2023]

திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் கிளாமராக நடித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நடிகை ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பல விளம்பர படங்களில் கெஹனா வசிஸ்த் என்ற நடிகை கிளாமராக நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக உள்ளாடை விளம்பரங்களில் இவர் நடித்துள்ள விளம்பரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தனது சமூக வலைத்தளத்தில் உள்ளாடை மட்டும் அணிந்த கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 80 விளம்பர படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகை கெஹனா வசிஸ்த், ‘பிலிமி துனியா’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் ’பேய்கள் ஜாக்கிரதை’ என்ற படத்திலும் தெலுங்கில் ஒரு படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை கெஹனா வசிஸ்த், இஸ்லாமியரான ஃபைஸான் அன்சாரி என்பவரை காதலித்த நிலையில் தற்போது அவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி அவரை திருமணம் செய்துள்ளார். அவரது திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.