close
Choose your channels

சிவகார்த்திகேயன் மகளால் பிரபலமான பாடலாசிரியர்

Thursday, August 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கனா'. இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷும், அவரது தந்தையாக சத்யராஜூம் நடித்து வருகின்றனர். திபு நினன் தாமஸ் இசையமைத்து வரும் இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது.

நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலஷ்மி ஆகியோர் பாடிய 'வாயாடி பெத்த புள்ளே' என்ற இந்த பாடல் கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனால் இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் ஜி.கே.பி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.

இந்த பாடல் இந்த அளவுக்கு புகழ்பெற முக்கிய காரணம் இந்த பாடலை சிவகார்த்திகேயனின் மகளும் பாடியதால்தான். சிவகார்த்திகேயன் மகளால் இந்த பாடல் பிரபலமடைய, இதனால் பாடலை எழுதிய ஜிகேபிக்கும் புகழ் கூடியுள்ளது. இவர் சூதுகவ்வும் படத்தில் இடம் பெற்ற "கம் னா கம்" பாடல் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமாகி அதன் பின் எனக்குள் ஒருவன், உரியடி, மரகதநாணயம், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment