சிவகார்த்திகேயன் மகளால் பிரபலமான பாடலாசிரியர்

  • IndiaGlitz, [Thursday,August 30 2018]

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கனா'. இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷும், அவரது தந்தையாக சத்யராஜூம் நடித்து வருகின்றனர். திபு நினன் தாமஸ் இசையமைத்து வரும் இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது.

நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலஷ்மி ஆகியோர் பாடிய 'வாயாடி பெத்த புள்ளே' என்ற இந்த பாடல் கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனால் இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் ஜி.கே.பி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.

இந்த பாடல் இந்த அளவுக்கு புகழ்பெற முக்கிய காரணம் இந்த பாடலை சிவகார்த்திகேயனின் மகளும் பாடியதால்தான். சிவகார்த்திகேயன் மகளால் இந்த பாடல் பிரபலமடைய, இதனால் பாடலை எழுதிய ஜிகேபிக்கும் புகழ் கூடியுள்ளது. இவர் சூதுகவ்வும் படத்தில் இடம் பெற்ற கம் னா கம் பாடல் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமாகி அதன் பின் எனக்குள் ஒருவன், உரியடி, மரகதநாணயம், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என்னடா பண்ணுன உள்ளே? மகத்தை அடித்து உதைத்த ரம்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா, மற்றும் யாஷிகாவின் சூழ்ச்சி வலையில் விழுந்து சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களின் அதிகபட்ச வெறுப்பை சம்பாதித்தவர் மகத்.

சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த சின்னஞ்சிறு மழலைகள்

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே.' மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு

இரும்புத்திரை' இயக்குனர் என்னை ஏமாற்றிவிட்டார்: அர்ஜூன்

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' படத்தின் 100வது நாள் விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

பழைய மிரட்டலுடன் மீண்டும் கேப்டன் விஜயகாந்த்: பார்த்திபன் தகவல்

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருக்கும்போதே அரசியல் கட்சி தொடங்கி நல்ல வாக்கு சதவிகிதத்தை பெற்றவர் கேப்டன் விஜயகாந்த்.

நடிகர்களின் கட்சிகளில் தவறாமல் இடம் பிடிக்கும் 'மக்கள்'

திரையுலகில் மார்க்கெட் குறையும் நடிகர்கள் அடுத்ததாக அரசியலில் இறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் நடிகர்களுக்கு அரசியல் ஆசை அதிகரித்துள்ளது.