82 வயதில் விளையாட்டு போட்டிகளில் பரிசு: தந்தையை நினைத்து பெருமைப்படும் பிரபல தமிழ் ஹீரோ

  • IndiaGlitz, [Wednesday,December 22 2021]

82 வயதிலும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்து வரும் தனது தந்தையை நினைத்து பெருமைப்படுவதாக தமிழ் ஹீரோ ஒருவர் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல ஹீரோக்களில் ஒருவர் விஷால் என்பதும் இவரது தந்தையும் தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி அவர்கள் உடலை ஃபிட்டாக வைத்திருப்பதில் விருப்பம் உடையவர் என்பதும் தெரிந்ததே. மேலும் ஜிகே ரெட்டி அவர்கள் உடற்பயிற்சி மற்றும் யோகா குறித்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார் என்பதும் அவை இளைஞர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் குவித்துள்ள ஜிகே ரெட்டி குறித்து நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார். ’உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றும், உங்களை விட எங்களுக்கு உந்துதல் சக்தி உடைய நபர் வேறு கிடையாது என்றும் இந்த வயதிலும் நீங்கள் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பதக்கங்களையும் குவித்து வருவது மிகப்பெரிய சாதனை என்றும் உங்களை நினைத்து எங்களுக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது’ என்றும் விஷால் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.