'சர்கார்' வதந்திகளை நம்ப வேண்டாம்: பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்க எம்.டி தகவல்

  • IndiaGlitz, [Thursday,November 22 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று திரையிடப்பட்டு மிகப்பெரிய வசூலை குவித்து வருகிறது. இந்த படம் ரூ.100 கோடி வசூலை தாண்டி ரூ.200 கோடி கிளப்பில் விரைவில் இணையவுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாக நிறுவனத்தின் பார்ட்னர் என்று கூறப்படும் ஒருவர் 'சர்கார்' படத்தால் தங்கள் திரையரங்கிற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் அந்த மல்டிபிளக்ஸ் திரையரங்க நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, 'எங்கள் திரையரங்கின் வசூல் குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்த டுவிட்டர் பக்கத்தில் வெளிவரும் தகவல் மட்டுமே அதிகாரபூர்வமானது. 'சர்கார்' படத்தை பொருத்தவரை எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. மலிவான விளம்பரத்திற்காக வைரலாகி வரும் வீடியோவில் உள்ள்வை உண்மையல்ல' என்று கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது சர்ச்சைக்குரிய அந்த வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.