வாரம் 2 நாள் லீவு விடுங்க: பொள்ளாச்சி விவகாரம் குறித்து நடிகர் விவேக்
Send us your feedback to audioarticles@vaarta.com
செல்போன், இண்டர்நெட் என்று வந்ததோ அன்றுமுதல் பெற்றோர் உள்பட உறவுகளிடம் பேசுவதே குறைந்து விட்டது. ஒரே வீட்டில் இருந்தாலும் அப்பா, அம்மா, பிள்ளைகள் என ஆளுக்கொரு மொபைலை கையில் வைத்து கொண்டு அதில் மூழ்கி விடுகின்றனர். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசுவதே இல்லை. இதுவே பின்னாளில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகி விடுகிறது.
இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வாரத்தில் இரண்டு நாட்கள் இண்டர்நெட்டை இளையதலைமுறையினர் பயன்படுத்த வேண்டாம் என்றும், அந்த இரண்டு நாட்களில் பெற்றோர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்றும், விளையாட்டில் ஈடுபடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் மனம் ரிலாக்ஸ் ஆவதுடன் இண்டர்நெட்டில் அடிமையாகும் ஆபத்தும் நீங்குகிறது, குற்றச்செயல்களும் குறைகிறது என தெரிய வந்துள்ளது.
இதனை குறிப்பிட்ட நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில், 'ஜப்பானில் வாரம் இரு நாட்கள் “ internet fasting” அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்த இரு நாட்களில் இளைய சமுதாயம், நெட் பக்கம் போகாமல் பெற்றோர், நண்பர்கள், விளையாட்டு, இயற்கை என்று இருக்க வேண்டுமாம்! இண்டர்நெட்டுக்கு அடிமையாகாமல் இருக்க இந்த திட்டம் ஒரு நல்ல திட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட அனைவரும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் இண்டர்நெட்டுக்கு விடுமுறை அளித்தாலே போதும், பல பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.
கேள்விப்பட்டேன். ஜப்பானில் வாரம் இரு நாட்கள் “ internet fasting” அமுல்படுத்தப் பட்டுள்ளது. அந்த இரு நாட்களில் இளைய சமுதாயம், நெட் பக்கம் போகாமல் பெற்றோர், நண்பர்கள், விளையாட்டு, இயற்கை என்று இருக்க வேண்டுமாம்! Great initiative to come away from cyber addiction
— Vivekh actor (@Actor_Vivek) March 14, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments