தனலட்சுமிக்கு தண்டனை கொடுங்க.. பிக்பாஸிடம் முறையிடும் பெண் போட்டியாளர்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக எந்த சண்டை வந்தாலும் அதில் தனலட்சுமி இருக்கிறார் என்பதால் அவருடைய தாக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகரித்து வருகிறது

நேற்று கூட அவர் மணிகண்டனுடன் சண்டைக்கு மல்லுக்கட்டினாலும் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகரிப்பதற்கு இந்த சண்டை ஒரு காரணமாக இருந்தது. இந்த நிலையில் இன்று ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற குழுவின் தலைவரான தனலட்சுமி இன்னொரு குழுவின் உள்ள கல்லா பெட்டியில் உள்ள காசை திருடி விடுகிறார்

இதை பார்த்த நிவாஸினி ’இது ரொம்ப தப்பு, இப்படி செய்யாதீர்கள்’ என்று கூறுகிறார். ஆனால் இது ஒரு கேம்தான் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று தனலட்சுமி அவர் சொல்வதை கண்டுகொள்ளாமல் தன் வேலையில் குறியாய் இருக்கின்றார்.

ஒரு குழுவில் உள்ள காசை இன்னொரு குழுவினர் திருடுவது என்பது விளையாட்டில் அனுமதிக்கப்பட்டது என்பது கூட தெரியாமல் நிவாஸினி இவ்வாறு பேசியிருக்கிறார். அதுமட்டுமில்ல அவர் கேமரா முன் பிக்பாஸிடம் தனலட்சுமியை தண்டிக்க வேண்டும் என்றும் அவருக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் முறையிடுகிறார்

மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் விளையாடிக்கொண்டிருக்கும் தனலட்சுமியை தண்டிக்க வேண்டுமென நிவாஸினி கூறுவதை பார்த்த பார்வையாளர்கள் இன்னும் அவருக்கு கேம் புரியவில்லை என கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.