ரூ.75 லட்சம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன்: தேர்தல் ஆணையத்திற்கு வேட்பாளர் மிரட்டல்

தேர்தல் செலவுக்காக ரூ.75 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன் என தேர்தல் ஆணையத்திற்கு சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பாலாகாட் என்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர் கிஷோர் சாம்ரைட். இவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை செலவு செய்யலாம் என அனுமதித்துள்ளது. என்னிடம் செலவு செய்ய அந்த அளவுக்கு பணம் இல்லை. எனவே தேர்தல் ஆணையம் எனக்கு அந்த பணத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும். அல்லது ஏதாவது ஒரு வங்கியில் லோன் வாங்க உதவி செய்ய வேண்டும். இல்லையே எனது ஒரு கிட்னியை விற்கவாவது அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கிஷோர் சாம்ரைட் பேட்டி ஒன்றில் கூறுகையில், 'என்னை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் அதிக பணத்தை செலவு செய்கின்றனர். என்னிடம் பணம் இல்லாததால் நான் தேர்தல் ஆணையத்திடம் கேட்கின்றேன். எனது தொகுதியில் போட்டியிடும் அனைவரும் ஊழல்வாதிகள். நான் இந்த தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
 

More News

கமல்ஹாசனை குறி வைத்து அடிக்கும் கரு.பழனியப்பன்?

கடந்த சில நாட்களாக திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம்  செய்து வரும் இயக்குனர் கரு.பழனியப்பன், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியபோது

மாம்பழமா? மாபெரும் பழமா? யாருக்கு ஓட்டு குறித்து பார்த்திபன் பதிவு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது.

23 வருடங்களுக்கு பின் பிரபுவுடன் ஜோடி சேரும் நடிகை!

கடந்த 1996ஆம் ஆண்டு இயக்குனர் சீமான் இயக்கத்தில் பிரபு நடித்த 'பாஞ்சாலங்குறிச்சி' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் 'ரோஜா' புகழ் மதுபாலா.

அருள்நிதியின் 'K13' சென்சார் தகவல்

கடந்த ஆண்டு அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்னும் த்ரில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'K13'

பாரீஸ் நோட்ரே டேம் சர்ச் தீவிபத்து: பிரபல தமிழ் நடிகை வருத்தம்!

நேற்று மாலை பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸ் நகரில் உள்ள பழமையான நோட்ரே டேம் சர்ச்சில் ஏற்பட்ட தீவிபத்து உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.