ரூ.75 லட்சம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன்: தேர்தல் ஆணையத்திற்கு வேட்பாளர் மிரட்டல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தேர்தல் செலவுக்காக ரூ.75 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் கிட்னியை விற்றுவிடுவேன் என தேர்தல் ஆணையத்திற்கு சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பாலாகாட் என்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர் கிஷோர் சாம்ரைட். இவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை செலவு செய்யலாம் என அனுமதித்துள்ளது. என்னிடம் செலவு செய்ய அந்த அளவுக்கு பணம் இல்லை. எனவே தேர்தல் ஆணையம் எனக்கு அந்த பணத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும். அல்லது ஏதாவது ஒரு வங்கியில் லோன் வாங்க உதவி செய்ய வேண்டும். இல்லையே எனது ஒரு கிட்னியை விற்கவாவது அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கிஷோர் சாம்ரைட் பேட்டி ஒன்றில் கூறுகையில், 'என்னை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் அதிக பணத்தை செலவு செய்கின்றனர். என்னிடம் பணம் இல்லாததால் நான் தேர்தல் ஆணையத்திடம் கேட்கின்றேன். எனது தொகுதியில் போட்டியிடும் அனைவரும் ஊழல்வாதிகள். நான் இந்த தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout